இந்திய வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தம்... முதல் மூன்று இடங்கள் யார்?.. பிசிசிஐ...! - Seithipunal
Seithipunal


இந்த வருடத்திற்கான (அக்டோபர் 2019 முதல் 2020 செப்டம்பர்) கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. 

இதன் படி கிரிக்கெட் வீரர்கள் 3 தரவரிசையில் கீழ் பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் முதல் உயர் தர வரிசையில் (A+) இருக்கும் நபர்களுக்கு ரூ.7 கோடி சம்பளமும், முதல் தர வரிசையில் (A) உள்ள நபர்களுக்கு 5 கோடியும் வழங்கப்படுகிறது. 

இதனைப்போன்று இரண்டாம் (B) தர வரையில் இருக்கும் நபர்களுக்கு 5 கோடியும், மூன்றாம் (C) தர வரிசையில் இருக்கும் நபர்களுக்கு 1 கோடி சம்பளமும் வழங்கப்படுகிறது. 

இதில் முதல் உயர் தரவரிசை பட்டியலை பொறுத்த வரையில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முதல் தர வரிசையை பொறுத்த வரையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், சேடேஸ்வர் புஜாரா, அஜிங்யா ரஹானே, கே.எல்.ராகுல், ஷிக்கர் தவான், மொஹம்மது சமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட ஆகியோர் உள்ளனர்.  

இதனைப்போன்று இரண்டாம் தர வரிசையில் வ்ரிடதிமன் சாஹா, உமேஷ் யாதவ், யூஸ்வேந்திர சாஹல், ஹர்டிக் பாண்டியா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரும், மூன்றாம் தரவரிசை பட்டியலில் கேதர் ஜாதவ், நவதீப் சைனி, தீபக் சாஹர், மனிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, சரத்துள் தாகூர், ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bcci announce yearly agreement for cricket players


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->