ஐசிசி தலைவர் தேர்தலில் கங்குலி போட்டியிட அனுமதிக்க வேண்டும்.. பிரதமருக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக ஜெய்ஷாவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் அக்டோபர் மாதத்துடன் பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளர் பதவி காலம் முடிவடைகிறது.

இந்த நிலையில் மும்பையில் பிசிசிஐயின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் தொடர விரும்பினார். ஆனால் மற்ற நிர்வாகிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கங்குலிக்கு ஐபிஎல் கமிட்டியின் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், கங்குலி அதனை பெற்று கொள்ள விரும்பவில்லை.

இந்த நிலையில் ஐசிசி தேர்தலில் போட்டியிட சவுரவ் கங்குலிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், சவுரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அவர் மேற்கு வங்கத்தின் பெருமை மட்டும் கிடையாது. அவர் இந்தியாவின் பெருமையும் கூட அவரை ஏன் இவ்வளவு நியாயமற்ற முறையில் ஒதுக்கப்படுகிறார். கங்குலி மீது கவனம் செலுத்தி அவரை ஐசிசி தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஐசிசி தலைவர் பதவிக்கு வரும் 20ம் தேதி வேப்பமனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிட்டால் கங்குலி எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI allowed to Ganguly in ICC president Election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->