வங்கதேச அணியுடனான இந்திய தொடர்! 20 ஓவர் போட்டிக்கான அணி அறிவிப்பு! தோனியின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் இந்தியாவிற்கு வங்கதேசம் அணியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ௨௦ ஓவர் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 

இருபது ஓவர் போட்டியானது நவம்பர் 3 ஆம் தேதி முதல் பத்தாம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டி தொடருக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா டி 20 போட்டிகளுக்கான பங்களாதேஷ் அணி: ஷாகிப் அல் ஹசன், தமீம் இக்பால், லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், நெய்ம் ஷேக், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, அஃபிஃப் ஹொசைன், மொசாடெக் ஹொசைன், அமினுல் இஸ்லாம், அராபத் சன்னி, முகமது சைபூத்தின், முஸ்தாபிஸூர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், அல்-அமின் ஹொசைன். 

இந்த போட்டிக்கான இந்திய அணி வருகின்ற அக்டோபர் 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் 21ஆம் தேதி தேர்ந்தெடுப்பதற்காக திட்டமிடப்பட்ட நிலையில், 23ஆம் தேதி பிசிசிஐ இன் புதிய தலைவராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்கும் நிலையில் அவர் கலந்து கொள்ள வசதியாக 24 ஆம் தேதி தேர்வு குழு கூட்டம் நடக்க இருக்கிறது என்று குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் தோனியின் எதிர்காலம் குறித்து பேச இருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladesh T20 Squad for India tour


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->