அதிர்ச்சி முடிவை எடுத்த கோலி! கோலியை காப்பற்றிய வங்கதேசம் வீரர்கள்!   - Seithipunal
Seithipunal


இந்தூரில் நடைபெற்று வரும் இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி விளையாடுகிறது. 

கடந்த 14ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச  அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் இரட்டை சதம், புஜாரா, ரஹானே, ஜடேஜா ஆகியோரின் அரைசதம் உதவியுடன் ஒரே நாளில் 400 ரன்களை குவித்து, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 493 ரன்கள் என்ற வலுவான நிலையில் இந்தியா இருந்தது. 

அப்பொழுது இந்திய அணி 343 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. இந்த நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து பேட் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில,  திடீரென டிக்ளேர் செய்து வங்காளதேசத்தை இரண்டாவது இன்னிங்சை விளையாட வைத்தது. அதன்படி தற்போது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடும் வங்கதேசம் உணவு இடைவேளைக்கு முன்பாக 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. 

ஆட்டம் இன்னும் மூன்று நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் எவ்வித அவசரமும் காட்டாமல் தொடர்ந்துஇந்திய அணி முதல் இன்னிங்சில் முடியும் வரை விளையாட வைத்திருக்கலாம். அதன் மூலம் இன்னும் அதிகமான முன்னிலையினை வங்கதேசம் அணிக்கு கொடுத்து இருக்கலாம். ஆனால் இந்த முன்னிலையை போதும் என நினைத்த கோலி அவசரப்பட்டு டிக்ளேர் அறிவித்து மூன்றாம் நாள் காலையிலேயே வங்கதேசத்தினை விளையாட வைத்துள்ளார். 

கோலியின் நேரம் நல்ல நேரமாக இருக்க அவர் எதிர்பார்த்தது போலவே வங்கதேச மணி முதல் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனால் எதிர்மறையான விமர்சங்களலிருந்து கோலி தப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladesh struggle to avoid innings defeat


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->