ஆஸ்திரேலிய அணியின் வீரர் அலுமினிய பேட் பயன்படுத்தினரா? வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


1975ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஆஷஸ்  கிரிக்கெட் தொடர் போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் பெர்த்திலுள்ள டபிள்யூ ஏசிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்திருந்தபோது, இயன் போத்தாம் வீசிய பந்தை டென்னிஸ் லில்லி ஓங்கி அடித்தபோது, பலத்த சப்தம் வெளியானது. 

ஆஸ்திரேலிய அணி வீரர் டென்னிஸ் லில்லி  பயன்படுத்திய  அலுமினிய பேட் கிரிக்கெட் வரலாற்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர் இவர் கிரிக்கெட் விதிமுறைகளில் புதிய விதிகளை சேர்க்க  காரணமானார்.

இந்த சர்ச்சைக்கான கரணம்:

இந்த போட்டி நடைபெற்ற 12 நாட்களுக்கு முன்னர், டென்னிஸ் லில்லி இதே பேட்டை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடியபோது பயன்படுத்தியிருந்தார். டென்னிஸ் லில்லி பயன்படுத்திய பேட், எல்லாரும் பயன்படுத்தியது போல மரத்தால் செய்யப்பட்டதல்ல. அதனால் பந்தை அடித்தவுடன் பலத்த சப்தம் எழுந்தது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியோடு விளையாடியபோது, டென்னிஸ் லில்லி அலுமினிய பேட் பயன்படுத்தியதை யாரும் எதிர்க்கவில்லை. இங்கிலாந்தோடு விளையாடியபோது, அந்நாட்டு கிரிக்கெட் அணியின் தலைவர் மைக் பிரேர்லி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால், நடுவர்கள் மேக்ஸ் ஓ'கனெல் மற்றும் டான் வெஸர் இருவரும், டென்னிஸ் லில்லி அலுமினிய பேட்டை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துவிட்டனர். டென்னிஸ் லில்லி, கோபத்தில் அலுமினிய பேட்டை வீசி எறிந்தார். கிரிக்கெட் விளையாட்டில் அலுமினிய பேட் பயன்படுத்தக்கூடாது என விதி முறைகள் மாற்றப்பட்டது. 

மரத்தால் செய்யப்பட்ட பேட்தான் பயன்படுத்த வேண்டுமென இதற்கு முன்  எந்த விதிமுறையிலும் குறிப்பிடப்படவில்லை.என்று வாதிட்ட ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் தலைவர் கிரெக் சாப்பல் மைதானத்திற்குள் வந்து, மரத்தால் செய்யப்பட்ட பேட்டை கொண்டு விளையாட டென்னிஸ் லில்லியை சம்மதிக்க வைத்தார்.

English Summary

australian team player used aluminum bat. released shocking information.


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal