உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாதியில் வெளியேறிய அதிரடி வீரர்.! ஆட்டத்தில் நடந்த அதிரடி.!! - Seithipunal
Seithipunal


12-வது உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கிறது. 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 10 அணிகளும், பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சவுதாம்டனில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது.

இதில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் பந்துவீசினார். அவர் வீசிய சுழல் பந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த உஸ்மான் கவாஜாவின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. 

அவர் ஆட்டத்தில் பாதியில் விட்டு விட்டு வெளியேறினார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது தாடையில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதற்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பெரிய காயம் இல்லை என்பதால் பயப்படவேண்டியதில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

australian player in injury


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->