ஆஸ்திரேலியாவிற்கு ஆரம்பமே அதிர்ச்சி! புவி, ஷமி அசத்தல்! - Seithipunal
Seithipunal


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி அடிலெய்ட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். கோலி இரண்டாவது முறையாக டாஸ் இழந்தார். கடந்த போட்டியை போலவே இந்த போட்டியின் போதும் டாஸ் இழந்ததில் கோலி அதிருப்தி அடைந்தார். 

இந்திய அணியில் ஒரே ஒரு மற்றம் செய்யப்பட்டது. கலீல் அஹமது நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முகம்மது சிராஜ் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளார். இது அவருக்கு முதல் ஒருநாள் போட்டியாகும். ஆஸ்திரேலியா அணி தரப்பில் அதே வெற்றி கூட்டணியே மாற்றமின்றி களமிறங்குகிறது. 

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச் அலெக்ஸ் காரே களமிறங்கினர். ஆரம்பம் முதலே புவனேஷ்வர், ஷமி வேகத்தில் தடுமாற்றத்துடன் ஆட ஆரம்பித்த நிலையில், கடந்த போட்டியை போலவே அதே 6 ரன்களுக்கு பின்ச் புவனேஷ்வர் பந்துவீச்சில் போல்டனார். அவரை தொடர்ந்து அலெக்ஸ் காரே வும் டாப் எட்ஜில் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சற்றுமுன் வரை ஆஸ்திரேலியா அணி 12 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்களை எடுத்துள்ளது. 5 ஓவர்கள் வீசிய புவனேஷ்வர் 9 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். 

 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia shocking start in Adelaide ODI


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->