இன்றைய போட்டியிலிருந்து அதிரடி ஆட்டக்காரர் விலகல்., சோகத்தில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி தான் விளையாடிய 8 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியடைந்து மீதமுள்ள 7 போட்டிகளில் வெற்றிபெற்று சுமார் 14 புள்ளிகளுடன் உலகக்கோப்பை தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. 

இந்தநிலையில், இன்றைய கடைசி லீக் தொடரில் ஆஸ்திரேலியே அணி தென்ப்பிரிக்கா அணியை எதிரித்து விளையாடுகிறது. இதனையடுத்து ஆஸ்திரேலியே அணியில் இடது கை பேட்ஸ்மேனான ஷான் மார்ஷ் இதுவரை நடத்த போட்டிகளில் அந்த அணியில் இடம்பிடித்திருந்தார். அவர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது பேட் கம்மின்ஸ் வீசிய பந்து கையை பலமாக தாக்கியது.

இதனால் உடனடியாக மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஷான் மார்ஷ் சோதனையில் அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் உடனடியாக அவர் ஆஸ்திரேலியே அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், மேலும் இன்றைய போட்டியில் அவர் விளையாட மாட்டார் தெரிவிக்கப்பட்ள்ளது. ஷான் மார்ஷ்க்கு பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். போட்டியிலிருந்து அவர் விலகி இருப்பது ஆஸ்திரேலியே ரசிகரங்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia player drop in today match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->