ஆஸ்திரேலிய அணியில் 7 முன்னணி வீரர்கள் விலகல்! இளம் வீரர்களை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!  - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகள் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் கொண்டு விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னணி வீரர்களான பாட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஜெய் ரிச்சர்ட்சன், மார்கஸ் ஸ்டோயினிஸ், மற்றும் டேனியல் சாம்ஸ் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்கள். இவர்கள் காயம் மற்றும் கொரோன பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முடியாது என்ற காரணங்களை கூறி விலகுவதாக அறிவித்துள்ளனர். 

இந்த நிலையில் இளம் வீரர்களைக் கொண்ட அணியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அணியின் கேப்டனாக மூத்த வீரர் ஆரோன் பின்ச் தொடர்கிறார். விரைவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்க இருக்கும் நிலையில் மூத்த வீரர்கள் விலகியிருப்பது அதிர்ச்சியை அளித்தாலும், அவர்களின் உணர்வை மதிப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணியானது, "பிஞ்ச், ஆஷ்டன் அகர், வெஸ் அகர், பெஹ்ரெண்டோர்ஃப், கேரி , கிறிஸ்டியன், ஹேசில்வுட், ஹென்ரிக்ஸ், மிட்செல் மார்ஷ், மெரிடித், மெக்டெர்மொட் , பிலிப் , ஸ்டார்க், ஸ்வெப்சன், டர்னர், டை, வேட், சம்பா என 15 வீரர்களை கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia key players opt out west indies and Bangladesh tour


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->