உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று 32 வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர் அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 116 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த அணி 50 ஓவர் முடிவுற்ற நிலையில் 7 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது.

பின்னர் இங்கிலாந்து அணி களமிறங்கியது தொடக்கமே அதிர்ச்சி அளித்தது தொடக்க ஆட்டக்காரர் ஜேம்ஸ் வைன்ஸ் டக் அவுட் ஆனார் ஜன்னி பைர்ஸ்ட்ரோ 27 ரன்கள், கேப்டன் இயான் மோர்கன் 89 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் அதிகபட்ச இவர்தான். பின்னர் வந்த அனைத்து வீரர்களும் சரியாக நிலை அடைந்ததால் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளது. இங்கிலாந்து அணி 44 .4 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் 10 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

ஆஸ்திரேலியா அணி புள்ளிபட்டியலில் 12  புள்ளிகளுடன் முதல் இடத்தில உள்ளது. இங்கிலாந்து அணி 8 புள்ளிகளுடன் 4 வது இடத்தில உள்ளது. அடுத்த நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் மட்டுமே அரைஇறுதிக்குள் செல்லும் இல்லையேல்இங்கிலாந்து  அணி அரைஇறுதிக்குள் செல்லும் வாய்புபை தவறவிடும் 

 இங்கிலாந்து அணியை விழித்தியதால் ஆஸ்திரேலிய அணி 12  புள்ளிகள் பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் அணி ஆஸ்திரேலிய என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று நடைபெறவுள்ள  நியூசிலாந்து-பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையே நடக்கும் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றபெற்றால் 13 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia in semi final


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->