டோக்கியோ ஒலிம்பிக் : இன்று இந்தியாவிற்கு முக்கியமான நாள்.. அதிரடி காட்ட போகும் இந்திய வீரர்கள்.!! - Seithipunal
Seithipunal


32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டியின் 12 வது நாளான இன்று இந்தியாவுக்கு மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் பதக்கம் வெல்வதற்கான அல்லது உறுதி செய்வதற்கான இரண்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். 

இந்திய வீரர்கள் இன்று தகுதி முதல் சுற்றில் பங்கேற்கின்றனர். காலை 5:35 மணிக்கு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (குரூப் ஏ)  தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில்  நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அதில் இந்திய வீரர்  நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் வரும் 7 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டி முன்னேறி உள்ளார்.

அதேபோல காலை 07:05 மணிக்கு அவர் ஈட்டி எறிதல் (குரூப் பி) போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் ஷிவ்பால் சிங் கலந்து கொண்டார். இந்த போட்டியில் இந்திய வீரர் சிவ்பால் சிங் தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்தார். 

காலை 11 மணிக்கு மகளிர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்திய சார்பில் லவ்லினா, துருக்கி சார்பில் பூசெனஸ் சர்மினெலி மோதுகின்றனர். இதில் லவ்லினா வெற்றி பெற்றால் தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்.

மாலை 03:30மணிக்கு மகளிர் ஹாக்கி அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. அதில் இந்தியா - அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aug 4 special day of india in olympic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->