#BREAKING | ஆசிய கோப்பையை வென்றது இலங்கை அணி.! - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை 2022 : இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குஷால் மெண்டிஸ் போல்டாகி அதிர்ச்சியளித்தார்.

மற்றோரு தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 8 ரன்களிலும், குணத்திலகா 1 ரன்னிலும் ஆட்டமிழந்து நடையை கட்டினார். 

தனஞ்ஜெயா டி சில்வா சிறிது அதிரடியாக ஆடி, 21 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா 2 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

தடுமாறிகொண்டிருந்த இலங்கை அணியை பனுகா ராஜபட்ச - வனிந்து ஹசரங்கா ஜோடி தங்களது அதிரடி ஆட்டத்தால் உயிர் கொடுத்தது.

இதில், வனிந்து ஹசரங்கா 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இறுதிவரை அட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய பனுகா ராஜபட்ச 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். 

இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றியுடன் கோப்பையை வெல்லலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், ரிஷ்வான் (55 ரன்கள்), அகமதுவை (32 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பாகிஸதான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இலங்கை அணி ஆசிய கோப்பையை 6 வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ASIA CUP 2022 SRI LANKA CHAMPION


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->