மனதை வென்ற சிராஜ், ஆட்டத்தின் நடுவே அஷ்வினிடம் சொன்ன வார்த்தை, பொதுவெளியில் பகிர்ந்த அஸ்வின்!   - Seithipunal
Seithipunal


இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் போது தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து அசத்தினார்.

9 விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு அஷ்வினுக்கு சுமார் 23 ரன்கள் சதத்திற்காக தேவைப்பட்ட பொழுது, முகமது சிராஜ் ஆட வந்தார். அவர் அஸ்வின் சதம் அடிக்கும் வரை சிறப்பான ஒரு தடுப்பாட்டத்தினை ஆடினார். அஸ்வின் சதம் அடித்து கொண்டாடிய அதே வேளையில், அதே உற்சாகத்துடன் முகமது சிராஜ் சதம் அடித்தது போலவே கொண்டாடினார். 

இந்நிலையில் இது குறித்து போட்டி முடிந்த பிறகு, அஸ்வின் தன்னுடைய யு டியூப் பக்கத்தில் சில சுவாரசிய தகவல்களை தெரிவித்துள்ளார். அஷ்வின் 90 ரன்களை நெருங்கியவுடன் அஷ்வினிடம் வந்த சிராஜ், " நான் தடுப்பாட்டம் ஆடுவதை பார்த்து, என்னுடைய அப்பா இருந்திருந்தால் கூட கைதட்டியிருக்க மாட்டார். ஆனால் சென்னை ரசிகர்கள் ஒவ்வொரு முறை தடுப்பாட்டம் ஆடும்போதும் கைதட்டி, கோஷமிட்டு என்னை உற்சாகப் படுத்துவது எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இதுவரை பார்த்திராதது, நீங்கள் கண்டிப்பாக சதமடிக்க வேண்டும், நான் உங்களோடு காலத்தில் கண்டிப்பாக ஆட்டமிழக்காமல் நிற்பேன்" என சிராஜ் தெரிவித்ததாக அஸ்வின் கூறியுள்ளார். 

அஸ்வின் சதம் அடித்த போது முகமது சிராஜ் கொண்டாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. சிராஜை குஷிப்படுத்திய ரசிகர்களை சிராஜும் அந்த இன்னிங்சில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு குஷிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ashwin about siraj told him when they were in crease


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->