சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணியில் தோனி! ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்!! - Seithipunal
Seithipunal


உலக கோப்பை தொடரில் தோனி மிகப்பெரிய அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் தோனி இடம்பெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. 

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி வருகிற 21ம் (நாளை) அறிவிக்கப்பட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களுக்கு ஓய்வு எடுக்கப்பட உள்ளதால், தோனி இடம்பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. 

முன்னாள் வீரர்கள் பலரும் தோனி  ஒய்வு குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என கருத்து கூறி வருகின்றனர். ஆனால் தோனி ஓய்வு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 

இந்நிலையில் தோனியின் நீண்ட நாள் நண்பரான அருண் பாண்டே தோனியின் ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். தோனி ஓய்வு குறித்து பல விதமான தகவல்கள் பரவினாலும், அவர் விரைவில் ஓய்வை அறிவித்தற்கான எந்த திட்டமும் இல்லை. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் டோனி இடம் பிடிப்பார் என கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arun pandey says West Indies series in dhoni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->