அடுத்த இந்திய போட்டி : உலகக்கோப்பையில் இருந்து மேலும் ஒரு வீரர் விலகல்! - Seithipunal
Seithipunal


உலக கோப்பையில் 60 சதவீத ஆட்டங்கள் முடிவுற்ற  நிலையில் இன்னும் ஒவ்வோர் அணிக்கும் இரண்டு மூன்று லீக் ஆட்டங்கள் மட்டுமே உள்ளன. இந்திய அணிக்கு மட்டுமே இன்னும் நான்கு லீக் ஆட்டங்கள் இருக்கிறது. 

இந்திய அணி தன்னுடைய அடுத்த லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டமானது வருகின்ற வியாழக்கிழமை 27 ஆம் தேதி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, அதுவும் இந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் அசத்திய ஆந்த்ரே ரசெல் காயம் காரணமாக விலகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவருக்கு பதிலாக அந்த நாட்டு வீரர் சுனில் அம்பரீஸ் எஞ்சிய போட்டிகளில் விளையாட அழைக்கப்பட்டுள்ளார். அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andre russell ruled out of remaining games of world cup


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->