இந்திய அணிக்கு தோனிக்கு நிகரான மாற்று வீரர் இவர் தான்.? அடித்து கூறும் அக்தர்.! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு பிறகு எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்துகொள்ளாத தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் பற்றிய நிலைப்பாடு தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பி நிற்கும் நிலையில், லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தோனிக்கு மாற்று வீரரை இறுதியாக இந்திய அணி கண்டுபிடித்து விட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி வெற்றியை இந்திய அணியின் வசமாக்கும் முன்னாள் கேப்டன் தோனிக்கு நிகரான சரியான மாற்று வீரரை கண்டறியாமல் உள்ளதாக இந்திய அணி மீது விமர்சனம் எழுந்து வரும் நிலையில்.  நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை தனது அபார ஆட்டத்தின் இந்திய அணி கைப்பற்றியது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சோயிப் அக்தர், முதல் போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் அடுத்த இரு போட்டிகளில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என இந்திய அணியை பாராட்டியுள்ளார் அக்தர்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிவுக்கு எதிரான தொடரின் மூலம் தோனிக்கு மாற்று வீரரை இறுதியாக இந்திய அணி கண்டறிந்துள்ளது என நான் நினைக்கிறேன் என கூறியுள்ள அக்தர், அது வேறு யாரும் அல்ல அந்த வீரர் மனிஷ்  பாண்டே தான் அது. அவர் விளையாடிய கடைசி இரண்டு போட்டிகளிலும்  போதுமான பந்துகளை அவர் எதிர்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் இடத்திற்கு மாற்றாக மனிஷ்  பாண்டே இருப்பதை இந்திய அணி தற்போது உணர்ந்துள்ளது. 

அதே போல ஷ்ரேயஸ் ஐயர்  ஒரு முழு கிரிக்கெட் வீரராக தற்போது உருவெடுத்துள்ளார். இந்த இரு வீரர்களால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலுவானதாக மாறும் என கூறியுள்ளார்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால் கிரிக்கெட் மைதானத்தில் பேட்டிங் குறித்து மனிஷ்  பாண்டே மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் நிறையவே விவாதிக்கின்றனர். இந்த இரு வீரர்களும் ஐ.பி.எல் போட்டிகளில் நிறைய விளையாடியுள்ளனர், அதனால் போட்டியில் அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது அவர்களுக்குத் நடராகவே தெரியும். எனவே இருவரும் முக்கியமான போட்டிகளை சிறப்பாக முடிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார் அக்தர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

akthar says indian cricket got new player same as dhoni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->