10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்கப்போகும் நிகழ்ச்சி., ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிப்பு..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வீரர்களின் பாதுகாப்புக்காக 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டியும் மற்றும் 3 இருபது ஓவர் போட்டியும் விளையாட இருக்கிறது இலங்கை கிரிக்கெட் அணி. 

இதன் முதல் ஒருநாள் போட்டியானது இன்று காராச்சியில் இன்று நடைபெறுகிறது. சென்ற 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி சுற்று பயணம் மேற்கொண்ட சமயத்தில், வீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பத்து ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்காக 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இலங்கையின் மலிங்கா, கருணாரத்னே, மேத்யூஸ், சண்டிமால், திசரா பெரேரோ உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், திரிமண்ணே தலைமையில் இலங்கை அணி, களம் இறங்க உள்ளது. அதேபோல், சர்ப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு சாதகமாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

After 10 years cricket match in pakistan vs srilanka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->