உலகக்கோப்பை : ஆப்கனிஸ்தானிடம் மண்ணை கவ்விய பாகிஸ்தான்!  - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை  தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. பிரிஸ்டோலில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக இமாம்-உல்-ஹக், பகர் ஜமான் ஆகியோர் களம் இறங்கினர். இமாம்-உல்-ஹக் 32 ரன்னும், பகர் ஜமான் 19 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த பாபர் ஆசம் 108 பந்தில் 112 ரன்கள் குவித்தார். மூத்த வீரர் சோயிப் மாலிக் 59 பந்தில் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 47.5 ஓவரில் 262 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய ஆப்கனிஸ்தான் அணி இறுதி ஓவரில்  2 பந்துகளை மீதம் வைத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan won Pakistan in world cup warm up match


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->