அச்சாங்கல்.. கிராமத்து விளையாட்டு.. விளையாடி பார்ப்போமா? - Seithipunal
Seithipunal


அச்சாங்கல் நாம் எல்லோரும் சிறுவயதில் விளையாடிய ஒரு விளையாட்டு ஆகும். இன்று நாம் பார்க்க இருக்கும் அச்சாங்கல் விளையாட்டு 7 கல் ஆட்டம் ஆகும். அச்சாங்கல் விளையாட்டை ஐந்து கற்கள், ஏழு கற்கள், பத்து கற்கள் கொண்டும் விளையாடலாம்.

இந்த விளையாட்டை இருவர் முதல் எத்தனை பேர் வேண்டுமானாலும் வயது வரம்பு இல்லாமல் வீட்டில் இருந்தபடியே விளையாடலாம்.

விளையாடும் முறை :

முதல் சுற்று :

கையில் உள்ள 7 கற்களை பரவலாக கீழே உருட்டிவிட்டு, அதில் ஏதேனும் ஒரு கல்லை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை மேலே தூக்கிபோட்டு, கீழே வருவதற்குள் கீழ் உள்ள ஏதேனும் ஒரு கல்லை எடுத்துக் கொண்டு மேலிருந்து கீழ்வரும் கல்லையும் கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இதேபோன்று முதல் சுற்றில் ஒவ்வொரு கற்களாக எடுக்க வேண்டும்.

இரண்டாம் ரூ மூன்றாம் சுற்று :

இரண்டாம் சுற்றில், இரண்டு இரண்டு கற்களாகவும், மூன்றாம் சுற்றில் மூன்று மூன்று கற்களாகவும் சேர்த்து வாரி எடுக்க வேண்டும்.

நான்காம் சுற்று :

இதில், கையில் எடுத்தக் கல்லை தவிர்த்து மீதமுள்ள ஆறு கற்களில் நான்கு கற்களாகவும், இரண்டு கற்களாகவும் சேர்த்து வாரி எடுக்க வேண்டும்.

ஐந்தாம் சுற்று :

இதில், கையில் எடுத்த கல்லை தவிர்த்து மீதமுள்ள ஆறு கற்களில் ஐந்து கற்களாகவும், ஒற்றைக் கல்லாகவும் வாரி எடுக்க வேண்டும்.

ஆறாம் சுற்று :

இதில், கையில் எடுத்த கல்லை தவிர்த்து மீதமுள்ள ஆறு கற்களையும் சேர்த்து வாரி எடுக்க வேண்டும்.

ஏழாம் சுற்று :

ஏழாம் சுற்றில் ஒரு கல்லை முதலிலும், இரண்டு கல்லை இரண்டாவதும், மூன்று கல்லை மூன்றாவதுமாக வாரி எடுக்க வேண்டும்.

எட்டாம் சுற்று :

7 கல்லையும் கீழே போட்டு அதில் ஒரு கல்லை மேலே தூக்கிப்போட்டு கீழே வருவதற்குள் கீழ் உள்ள ஒரு கல்லை எடுத்துக் கொண்டு மேலிருந்து கீழ்வரும் கல்லையும் கையில் சேர்த்து பிடிக்க வேண்டும்.

மறுபடியும் ஒரு கல்லை மேலே போட்டு கையில் இருக்கும் கல்லை கீழே உள்ள ஒரு கல்லுடன் வைக்கவும். மறுபடியும் அந்த இரு கற்களையும் வாரி எடுக்கவும். அதே மாதிரி ஆறு கற்களுடன் சேர்த்து அதை வாரி எடுக்கும் வரை விளையாட வேண்டும்.

ஒன்பதாம் சுற்று :

9 ஆவது சுற்றில் 7 கற்களையும் கீழே போட்டு ஒரு கல்லை எடுத்து மற்றொரு கல்லை வாரிக்கொண்டு அந்தக்கல்லை கையிலே வைத்துக்கொண்டு அடுத்தக்கல்லை வாரி எடுக்கும்போது கையில் உள்ள கல்லை கீழே விட்டுவிட வேண்டும். இவ்வாறு கீழே உள்ள கற்களை மாற்றிவிட்டு மூன்று தடவைக்குள் அனைத்து கற்களையும் ஒன்று சேர்த்து வாரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பத்தாம் சுற்று :

10 ஆவது சுற்றில் இரண்டு கைகளிலும் ஏழு கற்களை எடுத்து அதை அனைத்தையும் கீழே விழாமல் கையையும் பிரிக்காமல் தன் கெண்டக்கைக்கு கொண்டு வந்து அதை தூக்கிப்போட்டு பிடித்துக்கொள்ளவும்.

இறுதியாக ஏழு கற்களையும் உள்ளங்கையில் வைத்து அதை தூக்கிப்போட்டு பின் கையால் பிடித்து மறுபடியும் அதை சொக்கி பிடித்தால் 10 மதிப்பெண்ணாகவும், நேராக பிடித்தால் 5 மதிப்பெண்ணாகவும் கணக்கிட்டு யார் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறாரோ? அவரே வெற்றி பெற்றவர் ஆவார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

achankal game


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->