கிரிக்கெட் வெறும் விளையாட்டு அல்ல! இன்று மைதானத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!  - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல அதையும் தாண்டி என்பதனை இன்று தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செய்து காட்டியுள்ளது. 

இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் தொடங்குவதற்கு முன் டாஸ் போடுவதற்காக இந்திய அணியின் கேப்டனும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் மைதானத்திற்கு உள்ளே வரும்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயினுடன்  6 வயது சிறுவன் ஒருவன் உள்ளே நுழைந்தான். 

அந்த சிறுவன் ஆர்ச்சி சில்லர், பிறவி முதல் இருதய வால்வு நோயாளி. 6 வயதிற்குள் 13 அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டவன். ஆஸ்திரேலிய அணியின் கௌரவ கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள சிறுவன் டிம் பெயின், விராட் கோலியுடன் இணைந்து மூன்றாவது கேப்டனாக டாஸ் போடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  

ஆர்ச்சி சில்லர் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் 15 ஆவது வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என கணிக்க முடியாத நிலையில் மகிழ்ச்சியான வாழ்வை கொடுக்க வேண்டுமென நினைத்த அவருடைய பெற்றோர் உனக்கு என்ன ஆசை என்று கேட்டபொழுது கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலியே  அணியின் கேப்டனாக வேண்டும் என்று கூறியதை அடுத்து,  ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தினை அணுகி அதற்கு பயிற்சியாளர் லங்கார் ஒப்புதல் அளித்தார். 

இதனையடுத்து இன்று ஆஸ்திரேலிய அணியின் கௌரவ கேப்டனாக இன்றைய போட்டியில் ஆர்ச்சி ஷில்லர் இணைந்துள்ளார். சிறுவனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற நிலை இல்லாத நிலையில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கொடுத்து ரசிகர்கள் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. ரசிகர்கள் அனைவருக்கும் இது ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. கிரிக்கெட் ஒரு விளையாட்டு, வியாபாரம் மட்டும் அல்ல அதையும் தாண்டி உணர்வுபூர்வமானது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதுஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aarchy Schiller is honor captain of Australia men's team


கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
Seithipunal