ஐபிஎல் தொடரில் இருந்து மொத்தமாக வெளியேறும் ஆஸ்திரேலிய வீரர்கள்! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் எனப்படும் இந்திய பிரிமியர் லீக் தொடர் இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் வெளிநாட்டு வீரர்களும் விளையாடி வருகின்றனர். இந்த தொடருக்கு வீரர்களை அந்தந்த அணிகள் ஏலத்தின் மூலம் எடுத்து வருவதால் சிறப்பாக விளையாடும் வீரர்கள் கோடிகளில் ஏலம் போவார்கள்.

இந்நிலையில், வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 12 வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களை ஏலம் வரும் 18 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கிறது. தற்போது ஆஸ்திரேலியா வீரர்களான கிளென் மேக்ஸ்வெல், ஏரோன் பின்ச் ஆகியோர் ஐபிஎல் தொடரில் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர் என்று 2019-ம் ஆண்டின் தொடக்கம் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியான பணிச்சுமை இருப்பதால் போட்டிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆஸ்திரேலியா அணியின் வேக பந்து வீச்சாளர்களான ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கப் போவதில்லை தெரிவித்துள்ளதை மும்பை மிரர் தகவல் தெரிவித்துள்ளது.

English Summary

A total of Australian players from IPL


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal