பரபரப்பான ஆட்டம்.! திவாரி கையில் வெற்றி-தோல்வி முடிவு.! அசத்தும் சென்னை அணி.! - Seithipunal
Seithipunal


இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

அதன்படி, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளிஸ்சிஸ், மொயீன் அலி, ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். அம்பத்தி ராயுடு காயம் காரணமாக ரன் எடுக்காமல் வெளியேறினார். 

கேப்டன் டோனி 3 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சென்னை அணி 24 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. விக்கெட் ஒரு பக்கம் வீழ்ந்தாலும், மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஸ் அபாரமாக விளையாடினார். 

அவருக்கு துணையாக ஜடேஜா விளையாடிய நிலையில், 33 பந்தில் 26 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். அப்போது சென்னை அணி 16.4 ஓவரில் 105 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய அதிரடி சிக்ஸர் மன்னன் வெய்ன் பிராவோ 8 பந்தில் 3 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து அசத்தினார். 
 
இறுதியில் சென்னை அணி, 20 ஓவரில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. 41 ரன்னில் அரைசதம் அடித்த ருதுராஜ், இறுதிவரை ஆட்டமிலாமல் 58 பந்தில் 88 ரன்கள் அடித்து அசத்தினார்.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 விக்கெட்களை கொடுத்து தடுமாறி ஆடி வருகின்றது. டி காக் 17 ரன்னுக்கும், அன்மோல்ப்ரீத் சிங் 16 ரன்னுக்கும், சூரியகுமார் யாதவ் 3 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். 

அவரை தொடர்ந்து இஷான் கிஷன் 11 ரன்னுக்கும்,  போலார்ட் 15 ரன்னுக்கும், கருணாள் பாண்டிய 4 ரன்னுடம் ஆட்டமிழந்தனர். களத்தில் சவுராப் திவாரி 26 ரன்னுடன் ஆடி வறுகிறார். இவரின் விக்கெட்டை சென்னை அணி எடுத்தால் கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்தது போல் தான். 

தற்போதுவரை மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் (15 over) எடுத்து ஆடி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 wicket gone mi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->