2-வது டெஸ்ட் போட்டி : ஆரம்பமே அமர்க்களம்.. டாஸ் வென்ற கோலி.. இந்திய அணியில் முக்கிய இளம் வீரருக்கு வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்ததால், 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளும் போட்டியை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், போட்டி துவங்குவதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால் போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

இந்தியா: சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், விருத்திமான் சஹா, அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், உமேஷ் யாதவ், ஜெயண்ட் யாதவ், முகமது சிராஜ்

நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), வில்லியம் யங், டரில் மிட்செல், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளன்டெல், ரசின் ரவீந்திர, கைல் ஜாமிசன், டிம் சவுதி, சோமர்வில், அஜாஸ் பட்டேல்.

இந்திய அணியில் ரஹானே,  ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா ஆகிய மூன்று வீரர்களும் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். நியூசிலாந்து அணியின் நட்சத்தர வீரர் கேன் வில்லியம்சன் இடது முழங்கையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2nd test match india have won the toss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->