SA vs IND : இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்.? இடம் பெறப்போகும் இளம் வீரர்கள்.!! - Seithipunal
Seithipunal


தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் 31 வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில், இந்தியா-தென்னாபிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றால்தான் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது. 

தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும், உத்வேகத்துடன் இந்திய அணி இன்று நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது. முதல் போட்டியில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு, இன்றைய ஆட்டத்தில் இந்தியா சிறப்பாக விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

இந்தப் போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரை நிச்சயம் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய அணி சொதப்பியதால், பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

துவக்க வீரராக கே.எல் ராகுலுடன் களமிறங்கிய ஷிகர் தவான், முதல் போட்டியில் தனது பங்களிப்பை சரியாக செய்து விட்டதால், இரண்டாவது போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை. மிடில் ஆர்டரில் விராட் கோலி வழக்கம்போல் இடம்பெறுவார். அதேவேளையில் ஸ்ரேயஸ் ஐயர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவிற்கு இடம் கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பந்து வீச்சாளர்கள் வரிசையில் கடந்த போட்டியில் சொதப்பிய புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முகமது சிராஜிற்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் உத்தேச பட்டியல் :

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் அய்யர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாகூர் அல்லது ஜெயந்த் யாதவ், முகமது சிராஜ், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2nd odi may be 2 change for india team


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->