2022 டி20 உலக கோப்பைக்கான அட்டவணை வெளியீடு.. இந்திய அணியுடன் மோதும் அணிகள்.!! - Seithipunal
Seithipunal


2022 ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐ சி சி  வெளியிட்டுள்ளது. மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

 ஆஸ்திரேலியாவில் 6 நகரங்களில் டி20 உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது. அரையிறுதி இப்போட்டிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும், அடிலெய்டு ஓவன் மைதானத்திலும் நம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 11ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட்  மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது. அதேபோல நமீபியா, ஸ்காட்லாந்து, இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் முதன்மைச் சுற்றுக்கு முந்திய தகுதி சுற்றிலும் விளையாடுகின்றனர். 

இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. அக்டோபர் 23ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது என பிசிசிஐ அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2022 t20 world cup announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->