நியூசிலாந்து அபார பேட்டிங்.. இந்திய அணிக்கு 177 ரன்கள் இலக்கு.. வெற்றி யாருக்கு? - Seithipunal
Seithipunal


இந்திய அணிக்கு முதல் டி20 போட்டியில் 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா பௌலிங் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய டேரி மிட்செல் 59 ரன்களும், கான்வே 52 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1st T20 newzealand target of 177 runs against India


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->