கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்சில் 12 பேரை பேட் செய்ய வைத்த அரிதான நிகழ்வு! - Seithipunal
Seithipunal


இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்கா கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடக்காத ஒரு நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் இரண்டாவது இன்னிங்சில் மொத்தம் 12 வீரர்கள் பேட்டிங் செய்து உள்ளார்கள். ஒரு அணிக்கு வழக்கமாக 11 வீரர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய முடியும் என்ற நிலையில், முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 12 வீரர் ஒரே இன்னிங்சில் பேட்டிங் செய்த நிகழ்வு நேற்று அரங்கேறியுள்ளது. 

அண்மையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாற்றி அமைத்த விதியின்படி, ஒரு வீரர் காயம் அடைந்தால் அவருக்கு பதிலாக களமிறங்கும் வீரர், பேட்டிங் செய்யவும், பவுலிங் செய்யவும் முடியும் என்ற விதியின்படி, நேற்று 12  ஆவது வீரராக பிளாக்வுட் என்ற வீரர் வந்து பேட்டிங் செய்யும் சூழல் உருவானது. 

இந்த விதியானது ஆஷஸ் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த தொடரில் இரண்டாவது டெஸ்ட் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அந்த அணியின் முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் காயமடைந்து வெளியேறிய நிலையில், அடுத்த இன்னிங்சில் அவருக்கு பதிலாக மரன்ஸ்  லபுஸ்சாக்னே களமிறங்கினார். அப்போதும் ஒரே இன்னிங்சில் 11 வீரர்கள் மட்டுமே பேட்டிங் செய்தனர். போட்டியில் 12 வீரர்கள் களமிறங்கி பேட்டிங் செய்தார்கள். 

மேற்கு இந்திய தீவுகள் அணியின் இரண்டாவது இன்னிங்சில், பும்ராவின் துல்லியமான ஒரு பவுன்சரில் ஹெல்மெட் பாகங்கள் சிதற, டேரன் பிராவோ தாக்கப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து விளையாடிய அவர், பின்னர் தொடர முடியாமல் வெளியேறினார். அவருக்கு பதிலாக பிளாக்வூட் களமிறங்கி பேட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி பிராவோ, கேப்ரியல் என்ற இருவர் ஆட்டமிழக்காமல் இருக்கவே 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 batsmen batted in first time of test cricket west indies second innings


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->