நெஞ்சில் பள்ளத்துடன்.. யானை வாகனத்தில் காட்சி தரும் முருகன்.! - Seithipunal
Seithipunal


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் :

தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

கோயில் எங்கு உள்ளது :

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி என்னும் ஊரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 

கோயிலின் சிறப்புகள் :

வருடத்தின் நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது.

1 லட்சம் ருத்ராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் இங்கு உற்சவர் சன்னதியாக உள்ளது.

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இது 5வது வீடு ஆகும்.

அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறது.

வேறென்ன சிறப்பு :

இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பு மயிலுக்கு பதிலாக யானை உள்ளது. முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலம் என்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது.

முருகன் இங்கு யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். அதிலும் இத்தலத்தில் உள்ள யானை வாகனம், சன்னதியின் வெளியே பார்த்தபடி இருப்பது விசேஷமான தரிசனம்.

திருவிழாக்கள் :

மாசிப் பெருந்திருவிழா, சித்திரைப் பெருந்திருவிழா, வள்ளி கல்யாணம் 10 நாட்கள், தெய்வானை உற்சவம் 10 நாட்கள் ஆகிய திருவிழாக்கள் இத்தலத்தில் பெரிய அளவில் நடத்தப்படுகிறது.

ஆடிக் கிருத்திகை அன்று 10 லட்சம் காவடிகள் எடுத்து வருவது மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.

பிரார்த்தனைகள் :

திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் வேண்டி பிரார்த்தனைகள் செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்கல், பொங்கல் படைத்தல், சுவாமிக்கு சந்தனகாப்பு சாற்றுதல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்துகின்றனர்.

பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yanai vaganaathil murugan special temple 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->