கோவிலில் மறந்தும்கூட இதையெல்லாம் செய்து விடாதீர்கள்.! - Seithipunal
Seithipunal


ஆன்மிக வழிபாடு சிறப்புக்குரியது. இறைவனை வழிபடுவது மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது. கோவிலில் இறைவனை வழிபாடு செய்யும்போது அதை சரியாக புரிந்துக் கொண்டு வழிபாடு செய்தால் இறைவனின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கப்பெறும். ஆன்மிகங்களில் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய பழக்கங்களை பற்றி இங்கு பார்ப்போம்.

கோவிலில் தூங்கக்கூடாது.

தலையில் தொப்பி, துணி அணியக்கூடாது.

கொடிமரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்கக்கூடாது.

விளக்கு இல்லாமல் அல்லது விளக்கு அணைந்திருக்கும் பொழுது வணங்கக்கூடாது.

அபிஷேகம் நடக்கும்போது கோவிலை சுற்றி வரக்கூடாது.

கையில் விளக்கு ஏந்தி ஆராதனை செய்யக்கூடாது.

மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக்கூடாது.

கோவிலுக்குச் சென்று திரும்பியவுடன் கால்களை கழுவக்கூடாது.

சிவன் கோவில்களில் அமர்ந்து வர வேண்டும். பெருமாள் கோவிலில் அமரக்கூடாது.

மண் விளக்கை ஏற்றும் முன் அவற்றை சுத்தம் செய்யாமல் ஏற்றக்கூடாது.

கிரகணம் இருக்கும்போது கோவிலை வணங்கக்கூடாது.

புண்ணிய தீர்த்தங்களில் முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு பின் கால் அழும்ப வேண்டும்.

கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது.

குளிக்காமல் கோவிலுக்கு போகக்கூடாது.

சுவாமிக்கும், பலிபீடத்திற்கும் குறுக்கே செல்லக்கூடாது.

விபூதி, குங்குமம், பிரசாதம் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டபின் மீதமானவற்றை கீழே கொட்டுதல் சுற்றுத் தூண்களில் தடவுதல் கூடாது. மீதமானவற்றை ஒரு தாளில் மடித்துச் சென்று வீட்டின் பூஜையறையில் வைத்துக் கொண்டு தினசரி இட்டுக் கொள்ளலாம்.

பிரசாதங்களை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்ளுதலும் கூடாது.

கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது. மீதியிருக்கும் எண்ணெயை தலையில் தடவிக் கொள்ளக்கூடாது.

ஆண்கள் சட்டை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது. லுங்கி அணிந்து செல்லுதல் கூடாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

what not do in the temple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->