இன்று வெற்றியை தரும் விஜயதசமி.. நல்ல நேரம் இதோ.. என்னென்ன செய்யலாம்? - Seithipunal
Seithipunal


விஜயதசமி நல்ல நேரம் :

காலை 06.00 AM முதல் 09.00 PM வரை

பிற்பகல் 01.00 PM முதல் 01.30 PM வரை

மாலை 05.00 PM முதல் 06.00 PM வரை

விஜயதசமியன்று என்னென்ன தொடங்கலாம்?

நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு வரும் பத்தாவது நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்று தொடங்கப்படும் எந்தவொரு காரியமும் வெற்றியளிக்கும் என்பது நம்பிக்கை.

வித்யாரம்பம் :

ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை கல்வி கற்க துவங்கும் நாளை மிகவும் புனிதமாக கருதுவது இயல்பே. அந்த விசேஷமான தருணத்தை கொண்டாடும் நாள்தான் விஜயதசமி.

விஜயதசமியன்று குழந்தைகளுக்கு புதிய கலைகளான பாட்டு, இசைக்கருவி இசைத்தல், நடனம், ஓவியம் போன்ற கலைகளை கற்க பள்ளிகளில் சேர்ப்பார்கள். ஏற்கனவே இக்கலையை கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களும் தங்கள் குருவிற்கு சிறப்பு தட்சணை அளித்து சிறிது நேரமாவது இந்த நல்ல நாளில் அக்கலையை பயிலுவார்கள்.

விஜயதசமி நாளில் சிறு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்படுகிறது. 2 முதல் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு விஜயதசமியன்று வித்யாரம்பம் செய்யப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை கோவில்களிலோ அல்லது வீட்டிலோ செய்யலாம். கோவில்களில் செய்யும்போது நல்ல நேரம் பற்றி யோசிக்க வேண்டாம். வீட்டில் செய்யும்போது நல்ல நேரம் பார்த்து இதை செய்ய வேண்டும். குருவின் பங்கு இதில் மிகவும் முக்கியம்.

குழந்தையை வீட்டில் அப்பா, தாத்தா அல்லது தாய்மாமாவின் மடியில் உட்கார வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு தட்டில் அரிசியை முழுவதுமாக தூவி வைக்க வேண்டும். குரு குழந்தையின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை எழுத வைப்பார்.

குழந்தை தடையின்றி எழுதவும், பேசவும் இந்த சுபநிகழ்ச்சி மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

விஜயதசமியன்று என்னென்ன தொடங்கலாம்?

வித்யாரம்பம் செய்தல்

புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல்

புதிய தொழில் ஸ்தாபனங்கள்

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது

நடனம், சங்கீதம் போன்ற கலைகளை கற்க ஆரம்பித்தல் 

இதுபோன்ற செயல்களை விஜயதசமி அன்று ஆரம்பித்தால் வெற்றியும், புகழும் கிடைக்கும்.

முதல் நாள் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தகங்கள், இசைக்கருவிகள் மற்றும் தொழிலில் பயன்படுத்தும் கருவிகளை விஜயதசமி பூஜை முடிந்து உபயோகம் செய்வது சிறப்பு.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viyayadashami special 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->