அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவில் வரலாறு.! - Seithipunal
Seithipunal


மூலவர்     :    வரதராஜப்பெருமாள்.

அம்மன்        :    பெருந்தேவி மகாலட்சுமி.

பழமை    :    1000-2000 வருடங்களுக்கு முன்பு.

ஊர்     :    சூளகிரி.

மாவட்டம்    :    கிருஷ்ணகிரி.

தல வரலாறு :

ஒரு சமயம் பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் செல்கின்றனர். அப்பொழுது பல இடங்களுக்கு சென்று விட்டு சூளகிரி மலைப்பகுதிக்கு வருகின்றனர். பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன் பெருமாளை வழிபடுவதற்காக அங்கிருந்த மலையில் கல்லெடுத்து கோவிலமைத்து வழிபாடு செய்கிறான். 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூனன் பிரதிஷ்டை செய்த பெருமாளை தமிழக திருப்பதி என்று அழைக்கப்படுகிறார். அர்ஜூனன் பிரதிஷ்டை செய்ததற்கு அடையாளமாக இன்றும் இந்த மலையில் ஐந்து குண்டு என்ற ஐந்து குன்றுகள் உள்ளன. மேலும் இந்த மலையைப் பார்த்தால் சூலம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனாலேயே இப்பகுதி சூளகிரி என அழைக்கப்படுகிறது.

தல பெருமை :

மேற்கு பக்கம் பார்த்து இருக்கும் இந்த பெருமாள் கோவிலில் உத்ராயண காலத்தில் சூரியன் அஸ்தமனம் ஆகும் போது சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படுவது இதன் சிறப்பம்சமாகும். 

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :

பெருமாளை தரிசித்தால் நமது வாழ்க்கையில் எல்லா நலன்களும் மென்மேலும் வளரும் என்பது ஐதீகம். சனிக்கிழமைகளில் தரிசிப்பது சிறப்பாகும். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

திருவிழா :

இத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி, மார்கழி தனுர்பூஜை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவிழா காலங்களில் கருட சேவை இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். ஏனெனில் இந்தப் பகுதியிலேயே இங்கு தான் மிகப்பெரிய கருடாழ்வார் வாகனம் அமைந்துள்ளது.

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்.

முகவரி :

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவில், 
சூளகிரி - 635 117,
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

செல்லும் வழி : 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையின் பக்கத்தில் அமைந்துள்ளது சூளகிரி என்ற ஊர் அந்த ஊரின் அருகிலேயே அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு ஓசூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

varadharaja perumal temple in krishnagiri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->