வைகாசி மாதம் : எந்த ராசிக்காரர்கள் யாரை வழிபட வேண்டும்? - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு மகிமை இருக்கிறது. ஆடி மாதம் என்றால் அது அம்மனுக்கு உகந்தது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது, கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும், ஐயப்பனுக்கும் உகந்தது.

அதுபோல வைகாசி மாதம் முருகப்பெருமான் அவதரித்த மாதம். பல சிறப்புகள் வாய்ந்த இந்த வைகாசி மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த தெய்வங்களை வழிபடலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

மேஷ ராசிக்காரர்கள் :

ராகவேந்தரரை வியாழக்கிழமைதோறும் தீபம் ஏற்றி வழிபட மேன்மை உண்டாகும்.

ரிஷப ராசிக்காரர்கள் :

பிரதோஷ நாட்களில் நரசிம்மரை வழிபாடு செய்து வர நன்மைகளை அடையலாம். 

மிதுன ராசிக்காரர்கள் :

செவ்வாய்க்கிழமைகளில், ராகு நேரத்தில் துர்க்கையை வழிபடுவதால் சுபிட்சம் உண்டாகும். 

கடக ராசிக்காரர்கள் :

திங்கட்கிழமைதோறும் பார்வதி தேவியை வழிபாடு செய்வதால் மன ஆறுதல் கிடைக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

தினமும் காலையில் விநாயகரை வணங்கி, விநாயகர் அகவல் படித்து வர நன்மைகள் வந்தடையும்.

கன்னி ராசிக்காரர்கள் :

பைரவரை அஷ்டமி தினங்களில் வழிபட்டு வர இன்னல்கள் நீங்கும். 

துலாம் ராசிக்காரர்கள் :

அம்பாள் ஆலயத்தில் உள்ள வராஹி தேவியை வழிபட்டு வர நன்மைகள் அனைத்தையும் பெறலாம்.

விருச்சக ராசிக்காரர்கள் :

வியாழக்கிழமைதோறும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர காரியசித்தி உண்டாகும்.

தனுசு ராசிக்காரர்கள் :

சித்தர்களின் வழிபாடு மேன்மையைத் தரும்.

மகர ராசிக்காரர்கள் :

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமி மற்றும் பெருமாளை வழிபடுவது நற்பலனை தரும்.

கும்ப ராசிக்காரர்கள் :

கிருத்திகை நட்சத்திர நாட்களில் பழநி மலை சென்று முருகப் பெருமானை வழிபட்டு வர இன்பம் பெருகும்.

மீன ராசிக்காரர்கள் :

ராகு காலத்தில் துர்க்கை அம்மனை விளக்கேற்றி வழிபாடு செய்து வர ஆரோக்கியம் மேம்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaikasi month rasipalan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->