நாளை.. துர்காஷ்டமி.. அசுரர்களை அழிக்க அவதரித்த பத்ரகாளி.. இந்நாளில் என்ன சிறப்பு? - Seithipunal
Seithipunal


துர்காஷ்டமி:

துர்க்கை பிறந்தது அஷ்டமி திதியில் என்பதால் அந்த நாளை துர்காஷ்டமி என்று கூறுகிறார்கள். இந்த நாளில் வண்ணமயமான ஆடைகளை அணிந்து அனைவரும் ஒன்று கூடி கர்பா ஆடுகிறார்கள். 

மாதாமாதம் வரும் அஷ்டமியில் துர்க்கை வழிபாடு செய்வது சிறந்தது. நவராத்திரியில் வரும் துர்காஷ்டமியில் எப்படி வழிபடலாம் என்பது குறித்து பார்க்கலாம். 

நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது நாளை துர்காஷ்டமி என்று கூறுவார்கள். இந்த துர்காஷ்டமிக்கு வீராஷ்டமி, மகாஷ்டமி என்ற பெயர்களும் இருக்கின்றன. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களும் சிறப்பு வாய்ந்தவை. 

நவராத்திரி ஸ்பெஷல்... தர்ம தேவதை மகேஸ்வரி... யாரை வழிபடலாம்?.. - Seithipunal

துர்க்காஷ்டமி, மகா நவமி, விஜயதசமி என்று இந்த நாட்களை கூறுவார்கள். அந்த காலகட்டத்தில் ஆயுதங்களை வணங்குவதால் இது அஸ்ட்ரா பூஜை என்று அழைக்கப்படுகிறது. 

வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள் அம்பாலை அலங்கரித்து வழிபட வேண்டும். கரும்பு வில் மற்றும் மலர் அம்பு வேண்டியவாறு இந்த தேவி காட்சி தருவார். இந்த நாட்களில் ஒன்பது வயதுள்ள குழந்தையை துர்க்கையாக பாவித்து பூஜிக்கலாம். 

இதன் மூலம் செயற்கரிய செயல்களை செய்யும் வல்லமை கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கி, சத்ரு பயம் அகலும். கொலு வைக்காதவர்கள் அம்பிகை படத்திற்கு மல்லிகை, முல்லை, தாமரை மலர்கள் கொண்டு பூஜித்து சாம்பிராணி தூபமிட்டு ,நல்லெண்ணெயில் தீபத்தை ஏற்றி, கொண்டைக்கடலை சுண்டல் மற்றும் தேங்காய் சாதம் உள்ளிட்டவற்றை படைத்து துர்க்கைக்கு வணங்கலாம். 

வசதி இல்லாதவர்கள் சிவாலயத்திற்கு சென்று அங்குள்ள துர்க்கைக்கு எலுமிச்சையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி செய்தால் ராகு, தோஷம் நீங்கும். இதனால், குழந்தையின்மை, திருமண தடை உள்ளிட்டவை நீங்கும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இருக்கும் இடத்திலேயே துர்கா திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tommorrow dhurkashtami special 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->