ஒரு ஜான் உயரத்தில் மூலவர்.. ஐந்து முக பிரம்மா.. அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்.! - Seithipunal
Seithipunal


இந்த கோயில் எங்கு உள்ளது?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டீஸ்வரம் என்னும் ஊரில் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

தஞ்சாவூரில் இருந்து சுமார் 37 கி.மீ தொலைவில் பட்டீஸ்வரம் உள்ளது. பட்டீஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. 

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இத்தலத்த இறைவன் சதுர பீடத்தின் மீது ஒரு ஜான் உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

இத்தல துர்கை மற்ற தலங்களில் இருப்பது போல் அல்லாமல் சாந்த சொரூபியாக அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள்பாலிக்கிறாள்.

காளி மற்றும் துர்கைக்கு இயல்பாக சிம்ம வாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும். ஆனால் இந்த துர்கைக்கு சிம்ம வாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது.

இங்கு பட்டிக்கன்று மணலினால் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும், இத்தல பெருமானுக்கு பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

வேறென்ன சிறப்பு?

லிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. இதில் பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் உள்ளது.

இக்கோயிலிலுள்ள தூண்களில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தூணில் விநாயகர் கையில் வீணையுடனும், மற்றொரு தூணில் முருகன் யானை மீது அமர்ந்த கோலத்திலும் மற்றும் சரபேஸ்வரரும் காட்சி தருகின்றனர். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் விசேஷ பூஜை நடக்கிறது. 

பார்வதியுடன் சிவன் வாசுகி நாகத்தின் மீதுள்ள தாமரையில் அமர்ந்தவாரும், மடியில் சீதையை அமர்த்தியிருக்கும் ராமனின் பாதம் தொட்டு வணங்கும் ஆஞ்சநேயர் மற்றும் ஐந்து முகங்களுடன் கூடிய பிரம்மா ஆகிய சிற்பங்கள் இக்கோயிலில் அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

ஆனியில் முத்துப்பந்தல் விழா, சித்திரையில் பிரம்மோற்சவம், பங்குனி உத்திரத்தில் தெப்பத்திருவிழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம், சிவராத்திரி ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கவும், வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சுவாமிக்கு வஸ்திரம் சாற்றியும், அம்பாளுக்கு புடவை சாற்றியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today theenupurishwarar temple


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->