இலங்கையை நோக்கிய மூலவர்.. ராமபிரானின் பாதம்.. அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்...!! - Seithipunal
Seithipunal


இந்த கோயில் எங்கு உள்ளது?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி என்னும் ஊரில் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 43 கி.மீ தொலைவில் பொள்ளாச்சி என்னும் ஊர் அமைந்துள்ளது. பொள்ளாச்சியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

 இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த நிலையில் உள்ள பாறையில் வீர ஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

பிரகார தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீர ஆஞ்சநேயரின் முகம் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது.

கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடக நாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த மலைகளின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

வேறென்ன சிறப்பு?

இங்குள்ள இரட்டை முகத்துடன் கூடிய விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.

இக்கோயிலின் மேற்புறம் ராமபிரானின் பாதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ராமர் பாத சன்னதியும், கீழ்ப்புறம் ஆஞ்சநேயர் சன்னதியும் அமைந்துள்ளன.

இக்கோயிலில் யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

 இத்தலத்தின் அருகே ஓரிடத்தில் சிறிய தீர்த்தம் போன்று நீர் வடிகிறது. அதில் இரண்டு நாகங்கள் இன்று வரையிலும் எழுந்து நீராடி அவ்வப்போது சுவாமியின் கருவறைக்கு வந்து செல்வதாக ஐதீகம்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

ஆஞ்சநேயர் ஜெயந்தி இக்கோயிலில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆடி மற்றும் தை அமாவாசை, புரட்டாசி சனிக்கிழமை, தீபாவளி, பொங்கல், கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

திருமணத்தடை, புத்திர தோஷம், கடன் தொல்லை, விரோதிகள் தொல்லை ஆகியவை நீங்க மற்றும் எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றியடைய இத்தல ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சுவாமிக்கு துளசி, வடை மற்றும் வெற்றிலை ஆகிய மாலைகள் சாற்றியும், சிறப்பு அபிஷேகங்கள் செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

மேலும் வெண்ணெய் காப்பு சாற்றியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today special Coimbatore Hanuman temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->