தேய்பிறை பிரதோஷத்தில் சிவனையும், நந்திதேவரையும் மனதார வழிபட்டு வாழ்வில் வளங்களை பெறுவோம்.! - Seithipunal
Seithipunal


தேய்பிறை பிரதோஷம்:

சுபகாரியங்கள் செய்வதற்கான சிறந்த மாதங்களில் ஒன்றாக ஆனி மாதம் இருக்கிறது. ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த தினங்களில் பூஜைகள், வழிபாடுகள் செய்வது சிறப்பான நன்மைகளை அளிக்க வல்லதாகும்.

ஆனி தேய்பிறை பிரதோஷம் நாளை ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வருவதால் மிகவும் விசேஷமானதாகும். ஞாயிற்றுக்கிழமையில் வருகின்ற பிரதோஷத்தில் சிவனை வழிபடுவதால் சூரிய கிரக தோஷங்கள் நீங்குகிறது. கண்பார்வை குறைபாடுகளையும் தீர்க்கிறது.

ஆனி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். இந்த நாளில் மாலை வேளையில், அருகில் உள்ள சிவாலயத்திற்கு செல்லுங்கள். நந்திதேவர் மற்றும் சிவபெருமான் முதலானோரை கண்ணார கண்டு, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது பிரதோஷ நேரம் ஆகும். இந்த சமயத்தில், சிவாலயத்தில் உள்ள நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். முடிந்தால் சந்தனம், பால், தயிர், திரவியப்பொடி, பன்னீர், தேன் முதலிய அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள்.

அபிஷேகப் பொருட்களும், பலன்களும் :

பால் வாங்கி தர நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும்.

தயிர் வாங்கி தர தனலாபமும், வளங்களும் உண்டாகும்.

தேன் கொடுக்க குரல் வளம் இனிமையாகும்.

பழங்கள் வாங்கி தர விளைச்சல் பெருகும்.

பஞ்சாமிர்தம் வாங்கி தர செல்வம் பெருகும்.

நெய் வாங்கி கொடுத்தால் முக்திபேறு கிடைக்கும்.

இளநீர் கொடுக்க நல்ல மக்கட்பேறு கிட்டும்.

எண்ணெய் வாங்கி தர சுகமான வாழ்வும், சர்க்கரை வாங்கி தர எதிர்ப்புகளும் மறையும்.

சந்தனம் வாங்கி தர சிறப்பான சக்திகள் கிடைக்கும்.

மலர்கள் கொடுக்க தெய்வ தரிசனம் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theypirai pradhosham for nandhi thevar vazhipadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->