தை கடைசி வெள்ளி.. இன்றைய தின ராசிபலன் தெரிஞ்சிக்கலாம் வாங்க..!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் வரும். அலைச்சல்களால் மேன்மையான சூழல் உண்டாகும்.  முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். 

ரிஷபம்:

வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி ஏற்படும். ஞான உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். இன்சூரன்ஸ் தொடர்பான பணிகளால் இலாபம் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். 

மிதுனம்:

உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் அலைச்சல்களால் சுபச்செய்திகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். அரசு அதிகாரிகளிடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய இலக்கை அடைவீர்கள்.

கடகம்:

விவாதங்களில் சாதகமான சூழலால் வெற்றி கிடைக்கும். சமூக சேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். புண்ணிய காரியங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆகாய மார்க்க செய்திகளால் ஆதாயம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும்.  

சிம்மம்:

புத்திரர்களின் மூலம் சுபச்செய்திகள் வந்துசேரும். புதிய உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய கலைகளை கற்க ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். 

கன்னி:

புதிய வாகனச்சேர்க்கை ஏற்படும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிவோருக்கு ஏற்பட்ட பணச் சிக்கல்கள் நீங்கும். திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஆதாயம் உண்டாகும். 

துலாம்:

விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். செவித்திறனில் ஏற்பட்டுள்ள உபாதைகள் குறையும். குறுகிய தூர பயணத்தால் மாற்றம் உண்டாகும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். செய்தொழிலின் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். 

விருச்சகம்:

அந்நியர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும்.  பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழிலில் பொருள் தேக்கநிலை நேரிடலாம். பயணங்களில் கவனத்துடன் செல்லவும்.

தனுசு:

நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். ஆபரண, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் கூட்டாளிக்கு இடையேயான மனக்கசப்புகள் குறையும். நண்பர்களுடன் இணைந்து செய்யும் புதிய செயலால் தனலாபம் உண்டாகும்.

மகரம்:

புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் இட்டு அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் அமையும். இளைய உடன்பிறப்புகளால் நல்லதொரு சகாயம் உண்டாகும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

கும்பம்:

புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையேயான உறவுநிலை மேம்படும்.  தீர்ப்புகளில் சாதகமான சூழல் அமையாது. மகான்களின் ஆசிகள் கிடைக்கும். புனித யாத்திரை செல்வதற்கான திட்டங்கள் மேம்படும்.

மீனம்:

தாயின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பயணங்களால் இலாபம் ஏற்படும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். முயற்சிகள் ஈடேறக்கூடிய அனுகூலமான நாள். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thai month friday astrology


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->