இன்று தை அமாவாசை முன்னோர்களை வணங்க அருமையான விரத நாள்..!  - Seithipunal
Seithipunal


தை அமாவாசை முன்னோர்களை வணங்கக் கூடிய, திதி, தர்ப்பணம் கொடுக்கக் கூடிய மிக அருமையான விரத நாள். தை அமாவாசை எப்போது வருகின்றது, பூஜை, திதி, தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்...

அமாவாசை தர்ப்பணம் :
   
அமாவாசை என்பது முன்னோர்களை வணங்கி மரியாதை செய்யக் கூடிய விரத நாளாகும். அமாவாசை தினத்தில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்கக் கூடிய மிகச் சிறந்த நாள். அமாவாசைக்கு பின்னர் வளர் பிறை வருகின்றது. கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் நிலா வளர்வதாக ஐதீகத்தின் பெயரில் அமாவாசை சிறப்பு பெறுகின்றது.
அமாவாசைகளில் ஆடி அமாவாசை, மகாலயா அமாவாசை, தை அமாவாசை மிகவும் விசேஷமாக விரதம் கடைப்பிடிப்பது வழக்கம்.

ஆடி அமாவாசை :

ஆடி அமாவாசை தினத்தில் பிதுர் லோகத்திலிருந்து, முன்னோர்கள், தன் தலைமுறையினர் வாழும் வாழ்க்கையைப் பார்க்க வருவதாக கருதப்படுகின்றது.

மகாளய அமாவாசை :

இந்த தினத்தில் பிதுர்கள் பூலோகத்தை வந்தடைவதாக நம்பப்படுகின்றது.

தை அமாவாசை :

பிதுர்கள் அவர்களின் தலைமுறையை சேர்ந்த மக்களை பார்த்து ஆசிர்வதித்து,
மீனும் பிதுர் லோகத்திற்கே திரும்பி செல்வதாக ஐதீகம்.

இதன் காரணமாக இந்த முக்கிய அமாவாசை நாட்களில் உங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வணங்கி ஆசி பெற வேண்டியது அவசியம் என கூறப்படுகின்றது.

தை அமாவாசை எப்போது?

2020ல் தை அமாவாசை நாள், ஜனவரி 24ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) வருகின்றது.

ஜனவரி 24ஆம் தேதி அதிகாலை 3.06 மணிக்கு அமாவாசை திதி உள்ளது. அன்று முழுவதும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவும், அவர்களை வழிபடவும் மிகச்சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது.

வழிபாட்டுக்கான சிறந்த நேரம்: காலை 8.25 மணி முதல் 9.48 வரை பூஜை, பரிகாரத்திற்கு ராகு காலம், எமகண்ட காலத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.

தை அமாவாசை தினத்தில் நீர் நிலைகளான கடல், ஆறு உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகள் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thai matham amavasai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->