பெண்களை சபரிமலை அனுமதிக்கும் விவகாரத்தில்..முக்கிய முடிவை எடுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.! - Seithipunal
Seithipunal


கேரள சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மற்றும் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

இந்தநிலையில், 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி, இந்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டது.

இந்த வழக்கில் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியும் இதுவரையில் எந்த ஒரு முடிவையும் எட்ட முடியவில்லை. ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு அடிப்படை உரிமைகள், மதரீதியான நம்பிக்கைகளால் உருவான நடைமுறைகள் உள்ளிட்ட ஏழு முக்கிய கேள்விகளுக்கு சட்டரீதியான விடை காணுமாறு 9 நீதிபதிகள் அமர்வுக்குப் பரிந்துரை செய்துள்ளது. 

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று தொடங்கப்படும் விசாரணையின் போது இரு தரப்பினரும் வாதாட வேண்டிய முக்கிய கேள்விகள் குறித்து இறுதி செய்யப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court judge importent case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->