தினம் ஒரு திருத்தலம்... லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு..!! - Seithipunal
Seithipunal


அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில் :

மூகாம்பிகை கோயில் கர்நாடக மாநிலத்தில், உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் அமைந்துள்ளது. இக்கோயில் சக்தி பீடங்களில் மிகவும் சக்திவாய்ந்த திருத்தலமாக கருதப்படுகிறது. இக்கோயில், கோடாச்சத்ரி மலைக் குன்றுகளின் அடிவாரத்திலும், சௌபர்னிகா நதியின் தென்புறத்திலும் அமைந்துள்ளது. மேலும், இந்த இடமானது கோகர்ணம் மற்றும் கன்னியாகுமரி (பேரூராட்சி)க்கு இடையே அமைந்துள்ளது. 

கோயில் சிறப்பு :

இத்திருத்தலம் 51 சக்தி பீடங்களில் அம்பாளின் காதுகள் விழுந்த பகுதியாக கருதப்படுகிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது அர்த்தநாரி சக்தி பீடம்.

இத்தலத்தில் முதன்முதலில் அம்பாள் மூகாம்பிகையானவள், சிலை வடிவில் இல்லை. மூலவராக சுயம்பு லிங்கம் மட்டுமே இருந்தது. சிவபெருமானின் லிங்கத்தில், அம்பாள் அரூபமாகவே பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார். 

லிங்கத்தில் அரூப வடிவில் மறைந்திருக்கும் அம்பாளை வெளிக்கொண்டு வருவதற்கு ஆதிசங்கரர் கடும் தவம் மேற்கொண்டார். ஆதிசங்கரரின் வேண்டுதலை ஏற்ற தேவி, மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி தந்தாள். அந்த உருவத்தை அடிப்படையாக கொண்டு மூகாம்பிகை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை மட்டுமே நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும். இந்த லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம். 

அம்பிகை இக்கோயிலில் பத்மாசனத்தில், இரு கைகளில் சங்கு, கரத்துடன், காளி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள்.

ஐம்பொன்னால் ஆன காளி, சரஸ்வதி சிலைகள் மூகாம்பிகையின் இருபுறமும் உள்ளன. 

பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் லிங்கத்தில் அருள்பாலிப்பதாக நம்பிக்கை. இந்த லிங்கத்தை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். 

இத்தலத்திலிருந்து தான் ஆதிசங்கரர் 'சௌந்தர்ய லகரி" எழுதியுள்ளார்.

கோயில் திருவிழா :

பங்குனி உத்திரத்தில் கொடியேற்றம்;, மூலநட்சத்திரத்தில் தேர்த்திருவிழா, தீபாவளி, ஆனி மாதத்தில் அன்னையின் ஜெயந்தி, ஆடி மாதத்தில் வரும் அன்னை மகாலட்சுமியின் ஆராதனை, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி, மாசி மாதத்தில் வரும் மகா தேர்த்திருவிழா ஆகியன இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

வேண்டுதல் :

சரஸ்வதி பூஜையன்று, மூகாம்பிகை சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி, பவனி வருகிறாள். மூகாம்பிகை சரஸ்வதி அம்சம் என்பதால், கல்வியில் சிறந்து விளங்கப் பிரார்த்தனை செய்வது சிறப்பு.

நேர்த்திக்கடன் :

அம்மனுக்குப் புத்தாடை சாற்றி சிறப்பு பூஜை செய்யலாம்.

பிரசாதம் :

ஒருமுறை ஆதிசங்கரர் மூகாம்பிகையை நினைத்து இங்கு தவம் புரிந்து, எழ முயன்றபோது அவரால் முடியவில்லை. சங்கரருக்காக அம்பாளே கசாயம் தயாரித்துக் கொடுத்ததாகவும், அதனால், அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் அனைவருக்கும் கசாயம் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கசாயத்தைச் சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri mookambika temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->