தினம் ஒரு திருத்தலம்... மரத்தால் செய்யப்பட்ட சிலை... நவகைலாயங்களில் ஆறாவது தலம்...!! - Seithipunal
Seithipunal


அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் :

அமைவிடம் :

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரோட்டில்; ஸ்ரீவைகுண்டம் அமைந்துள்ளது. அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. 

மாவட்டம் :

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டம்.

கோவில் சிறப்பு :

இத்தலம் நவகைலாயங்களில் ஆறாவது தலம். இது சனி தலமாகும். இங்குள்ள கொடிமரம் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். 

இவ்வூரிலேயே 108 திருப்பதிகளில் ஒன்றான கள்ளபிரான் கோயிலும் அமைந்துள்ளது. இது நவதிருப்பதிகளில் சூரியனுக்குரிய தலமாகும்.

ஒரே ஊரில் நவகைலாயமும், நவதிருப்பதியும் அமைந்துள்ளது விசேஷம். இத்தலத்தின் பூதநாதர் சிலை மிகவும் விசேஷமானது. இது மரத்தால் செய்யப்பட்டது. 

இத்திருக்கோயிலை வழிபடுவது காரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாறு திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது.

திருவிழா : 

சித்திரை, ஐப்பசியில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், ஆறாட்டுவிழா, ஐப்பசி திருக்கல்யாணம், கந்தசஷ்டி, சிவராத்திரி ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

பிரார்த்தனை : 

ஜாதகரீதியாக சனி தோஷம் உள்ளவர்கள், சனிப்பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர் இங்கு கைலாசநாதரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இழந்த சொத்துக்களைப் பெறவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன் : 

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri kailasanathar temple in srivaikuntam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal