அதிசயம்... சிரிக்கும் பெருமாள்... வியர்க்கும் திருமுகம்..! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் நாம மலையில் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் ஸ்ரீநிவாசப் பெருமாளாக அருள்பாலிக்கிறார். இவர் தாயார் ஸ்ரீதேவி-பூதேவி ஆகியோருடன் அழகுறக் காட்சி தருவது மிகச் சிறப்பாகும். 

ராமாயண காலத்தில் இலங்கையில் இருந்து வான் வழியாக ராமர், சீதை மற்றும் விபிஷணன் ஆகியோர் அயோத்தி செல்லும் போது, அவர்கள் சென்ற ரதத்தின் நிழல் விழுந்த இடங்களில் ஒன்றுதான், ஸ்ரீநிவாசப் பெருமாள் குடிகொண்டுள்ள இடமாகும்.

இதன் மகிமையை உணர்ந்த கிருஷ்ண தேவராயர் 16-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தக் கோவிலை கட்ட ஆரம்பித்தார்.

பூஜையின்போது மூலவர் பெருமாளின் திருமுகத்தில் வியர்ப்பதைக் காணலாம். மேலும் பெருமாள் இங்கு தரிசிக்கும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களைக் காட்டுகிறார். நமது வேண்டுதல் நியாயமானதா இல்லையா என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

மூலிகைக் கற்களைக் கொண்டு, திருப்பதியில் பெருமாள் காட்சி தரும் அதே திருக்கோலத்திலேயே இங்கும் பெருமாள் காட்சியளிப்பது கண்கொள்ளா காட்சி! மேலும் திருப்பதி மலைவாழும் ஏழுமலையான், தமது சயன நேரத்தில் இங்கு வந்து உறங்கி ஓய்வெடுத்துச் செல்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sirukum perumal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->