இந்த லக்னகாரர்களுக்கு., வெளிநாடு பயணங்களால் அனுகூலம் உண்டாகும்..! - Seithipunal
Seithipunal


சிம்ம லக்னக்காரர்களுக்கு சந்திர திசை நடந்தால் உண்டாகும் பலன்கள்:

சிம்ம லக்னத்தின் அதிபதி சூரிய பகவான் ஆவார். சூரிய பகவானுடன் சந்திரன் நட்பு என்ற நிலையில் இருந்து திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

வெளிநாடு தொடர்பான பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

வாழ்க்கையில் சுபிட்சங்கள் அதிகரிக்கும்.

தர்க்கம் புரிவதில் சற்று கவனத்துடன் செயல்படவும். 

பிறருக்கு உதவுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 

வேள்விகளில் கலந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். 

உலக வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். 

நெருக்கமானவர்களிடம் சில மனக்கசப்புகள் ஏற்பட்டு மறையும். 

குடும்பத்தில் சுபச்செயல்கள் கைகூடி வரும்.

குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

பரிகாரம் :

அவரவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கட்கிழமைதோறும், சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதிதேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simma laknam chandra dhisa


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->