இன்றைய ராசிபலன்கள்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் இந்த ராசிக்குத்தான்... இது உங்கள் ராசியா? - Seithipunal
Seithipunal


மேஷம்:

வாகனங்களை பழுது பார்ப்பீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த மந்தத்தன்மையால் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடலாம். பங்காளி வகை உறவினர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மனதில் எதிர்காலம் தொடர்பான வீண் கவலைகள் ஏற்படும்.

ரிஷபம்:

மனதில் புதிய சிந்தனைகள் மற்றும் அறிமுகங்கள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் விரயம் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுக்களில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பிரபலமானவர்களுடன் நட்பு உண்டாகும். தர்க்க விவாதங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.

மிதுனம்:

உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். உடனிருப்பவர்களின் பிரச்சனைகளில் ஈடுபடும்போது நிதானத்துடன் செயல்படவும். வாகனப் பயணங்களின்போது தேவையான ஆவணங்களை கொண்டு செல்லவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் சோர்வு உண்டாகும்.

கடகம்:

தொழிலில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். புதிய நபர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க முயல்வீர்கள். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும்.

சிம்மம்:

உறவினர்களின் ஆதரவால் சுபச்செய்திகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். தொழிலில் எதிர்பாராத தனவரால் சேமிப்புகள் உயரும். தாய்வழி ஆதரவினால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி:

தந்தையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். நிறுவனங்களில் புதிய நபர்களுக்கு வாய்ப்புகளை அளிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்த அனுகூலமான சூழல் உண்டாகும்.

துலாம்:

செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தேவையற்ற வீண் செலவுகளால் சேமிப்பில் உள்ள பணம் குறையும். உடல்நலத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சகம்:

தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக காரியங்களை செய்வீர்கள்.

தனுசு:

நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழில் தொடர்பான முடிவுகளில் கவனம் வேண்டும்.

மகரம்:

தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். போக்குவரத்து தொடர்பான தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான சூழல் ஏற்படும்.

கும்பம்:

பிள்ளைகளின் ஆதரவுகளால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அரசின் அனுகூலத்தினால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். உயர் பதவிக்கான சாதகமான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

மீனம்:

சர்வதேச வணிகத்தில் புதிய முதலீடுகளால் நன்மை உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொன், பொருட்சேர்க்கை ஏற்படும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sep 23 rasi palan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->