இன்றைய தினப்பலன்கள்... யாருக்கு சாதகம்?... யாருக்கு லாபம்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

வெளியூர் வேலைவாய்ப்புகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும்.

ரிஷபம்:

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உடைமைகளில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும்.

மிதுனம்:

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான விவாதங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள்.

கடகம்:

வாகனங்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். தலைமை பதவி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வீடுகள் வாங்குவதற்கான முயற்சிகள் ஈடேறும். அரசாங்க பணிகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்:

புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனவரவுகள் மத்திமமாகவே இருக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

கன்னி:

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த சண்டை, சச்சரவுகள் குறைந்து சுமூகமான நிலை உண்டாகும். வர்த்தக பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

துலாம்:

புதிய செயல்திட்டம் ஒன்றை வகுத்து அதை செயல்படுத்த முயல்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். மனதில் தோன்றும் தேவையற்ற சஞ்சல எண்ணங்களால் மனவருத்தங்கள் உண்டாகும். இளைய உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சகம்:

பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான சூழல் உண்டாகும்.

தனுசு:

மூத்த சகோதரர்களால் தனலாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் மேன்மையான சூழல் ஏற்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்:

கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். தாய்வழி ஆதரவினால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்:

பொதுக்காரியங்களில் ஈடுபட்டு நற்பேறுகள் கிடைக்கும். இஷ்ட தெய்வங்களை வணங்குவீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிரிகளை கண்டு அவர்களின் திட்டங்களை களைவீர்கள். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள்.

மீனம்:

செய்யும் பணிகளில் கவனமாக இருக்கவும். சுயதொழிலில் மந்தமான இலாபம் கிடைக்கும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேலோங்கும். வார்த்தைகளில் பொறுமை வேண்டும். முடிவுகளில் காலதாமதம் ஏற்படும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sep 21 rasi palan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->