இன்றைய (13-09-2019) ராசிபலன்கள்: சிம்ம ராசிக்கு சூப்பர்... தனுசு ராசிக்கு சுமார்... உங்க ராசிக்கு எப்படி? - Seithipunal
Seithipunal


மேஷம்:

மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கால்நடைகளால் இலாபம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான விவகாரங்களில் நிதானம் வேண்டும். பணியில் எதிர்பார்த்த சில மாற்றங்கள் உண்டாகலாம். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.

ரிஷபம்:

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் இலாபம் அதிகரிக்கும். பணியில் இருந்து வந்த எதிர்ப்புகள் மறையும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்து வந்த காலதாமதம் நீங்கும். நண்பர்களுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் அகலும். பதவி உயர்வு சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்:

தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்களுக்கு சக ஊழியர்களால் ஆதரவான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சம்பந்தமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். 

கடகம்:

வர்த்தகம் சம்பந்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. செய்யும் செயல்களில் கவனம் வேண்டும். திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் உண்டாகும். வாகன பராமரிப்பு செலவுகள் நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

சிம்மம்:

வியாபாரம் சம்பந்தமான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் பணி சம்பந்தமான முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நாள். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். 

கன்னி:

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தடை, தாமதங்கள் நேரிடலாம். போட்டிகளில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாலின மக்களால் ஆதரவான சூழல் உண்டாகும். பயணங்களில் நிதானம் வேண்டும்.

துலாம்:

பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உயர்கல்வி சம்பந்தமான வீண் கவலைகள் உண்டாகும். பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் ஏற்படும். உயர் அதிகாரிகள் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள். புத்திக்கூர்மை வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சகம்:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழிலில் சூழலுக்கு தகுந்தவாறு மாற்றம் செய்வீர்கள். கோபத்தை விடுத்து அனைவரிடமும் அமைதியுடன் செயல்படவும். புதிய சிந்தனைகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும்.

தனுசு:

மனைவியின் ஆதரவால் சில செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத அலைச்சலும், செலவும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானமாக இருக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவு திருப்திகரமாக அமையும்.

மகரம்:

புதிய தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். தலைமை பதவியில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். வாகன பயிற்சி மேற்கொள்ளும் போது நிதானம் வேண்டும். உடைமைகளில் கவனம் வேண்டும். கருத்துக்களை பரிமாறும் போது கவனம் வேண்டும்.

கும்பம்:

மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாதத்திறமையால் அனைவரையும் கவர்வீர்கள். குழந்தைகளை பற்றிய வீண் கவலைகள் அகலும். கூட்டாளிகளின் உதவியால் தொழில் சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்:

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களில் இருந்து வந்த தடைகள் அகலும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sep 13 rasipalan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->