சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா.? வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


புரட்டாசி மாதம் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, தீபாராதனை காட்டினார். மறுநாள் அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் தினசரி பூஜை நடைபெற்று வந்த நிலையில், ஐந்து நாள் பூஜை இன்றுடன் நிறைவு பெறுகிறது. 

இதையொட்டி, கோவில் நடை இன்று இரவு 7.30 மணிக்கு சாத்தப்படும். புரட்டாசி மாதம் பூஜையிலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது 5 நாள் பூஜைக்கு பிறகு ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் 16ம் தேதி திறக்கப்பட உள்ளது. 

17ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அப்போது முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும் என்பது குறித்து தேவசம்போர்டு ஆலோசனை நடத்தி வருகிறது. தங்களுடைய கருத்தை அறிக்கையாக தயாரித்து அரசுக்கு பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு இறுதி முடிவு எடுக்கும். மண்டல பூஜைக்கு முன் பக்தர்கள் அனுமதிப்பது காணலாமா? என வருகிற 28-ந் தேதி அரசு ஆலோசனை நடத்தவுள்ளதாக அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sabari mala iyyappan temple devotees


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->