வரும் சனிக்கிழமை.. சூரிய வழிபாடு செய்தால் இவ்வளவு நன்மைகளா.?! தவறவிட்டுடாதீங்க.!  - Seithipunal
Seithipunal


முக்கிய விரத தினமாக சூரிய பகவானுக்கு இருப்பது ரதசப்தமி விரதம். தை மாதத்தில் வரும் சப்தமியை தான் ரத சப்தமி என்று கூறுகிறோம். அந்த நாளில் சூரியன் பிறந்ததாக கூறப்படுகிறது.

எனவே விசேஷமான அன்று சூரிய பகவானை வழிபடுவது அவசியம். இந்த நாள் சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வருடம் இந்த ரதசப்தமி (28 - 1 - 2023) வரும் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. எனவே அந்த நாளில் சூரியனை எவ்வாறு வழிபடலாம் என்பது குறித்து பார்க்கலாம். 

இந்நாளில் புனித ஸ்தலங்களுக்கு சென்று சூரிய ஒளி படுகின்ற இடத்தில் நின்றவாறு அதிகாலை நீராடலாம். சுத்தமான இடத்தில் செம்மண்ணை பூசி அதில் சூரியனை வரைந்து அதில் மஞ்சள் குங்குமம் இட்டு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியனை வழிபடலாம்.

இந்த பூஜையின் போது உளுந்து, வடை, சக்கரை பொங்கல் உள்ளிட்டு அவற்றை வைத்து படைக்கலாம். இந்நாளில், பசு மாட்டிற்கு சாதம், சப்பாத்தி உள்ளிட்டவற்றை கொடுப்பது நல்லது.

சூரிய ஒளி படுகின்ற இடத்தில் வாசலில் அரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்டவற்றை வைத்து படைக்கலாம். இந்நாளில் தான, தர்மங்கள் செய்வது அதிக புண்ணியம் கிடைக்க வழிவகை செய்யும். 

அத்துடன் துணி, அரிசி உள்ளிட்டவற்றை தானமாக வழங்கினால் நமது பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Radhasapthami Vazhipadu 2023 Thai madham


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->