“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி "- இது ஒரு தெய்வீக விடுகதை.! - Seithipunal
Seithipunal


குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீஎன்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் குபேரன். பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன்.

குபேரன் கடனை கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீவராகப்பெருமாள்.

அதானால் பன்றியாகிய ஸ்ரீவராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின்மீது நின்றகோலத்தில் மக்களுக்கு அருள்புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள்.

திருப்பதி-வராக சுவாமி கோயில்: வெங்கடாசலபதி கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ளது. புராணங்களின்படி இது ஆதி வராக க்ஷேத்ரம் என்று தெரியவருகிறது. பெருமாள் ஸ்ரீநிவாசனாக பூமிக்கு வந்தபோது ஆதி வராக சுவாமியிடம் அனுமதி பெற்றே திருமலையில் தங்கினார். வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்வதற்கு முன் பக்தர்கள் ஆதி வராக சுவாமியை தரிசிக்க வேண்டும். அவருக்கே முதல் நைவேத்தியமும் படைக்க வேண்டும்.

வராக அவதாரம் ஆதி வராகம், பிரளய வராகம், யஜ்ன வராகம் என மூன்று வடிவங்களில் பூஜிக்கப்படுகிறது. இங்குள்ள வராக சுவாமி “ஆதி வராகர்’ எனப்படுகிறார்.  இவரது திருநாமம் ஆதிவராக மூர்த்தி என்பதாகும். இவரது கோயில் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளக் கரையில் உள்ளது.

திருப்பதி திருமலைக்கு சொந்தக்காரரான ஸ்ரீ லக்ஷ்மி வராஹ பெருமாள் திருவடிகளே சரணம்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

purataci special perumal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->