புதன் மேடு இப்படி இருந்தால்... சிறந்த யோகசாலிகளாக இருப்பார்கள்..!! - Seithipunal
Seithipunal


புதன் மேடு என்பது சுண்டு விரலுக்கு கீழே இருக்கும் பகுதியை குறிக்கும். புதன் மேடு நல்ல முறையில் அமைந்திருந்தால் உயரம் குறைவானவர்களாகவும், பருமனான தோற்றம் உடையவர்களாகவும், இளமை பூரிக்கும் முக அமைப்பை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

குணநலன்கள் :

புதன் மேடு உயர்ந்து காணப்பட்டால் நல்ல புத்தி சாதுர்யமுள்ளவர்களாகவும், குடும்பத்தின் மீது பாசம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அதுமட்டுமின்றி ஒழுங்கு முறை தவறாதவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களின் குடும்பத்தில் இன்ப சூழ்நிலை நிலவும். மனைவி, மக்கள் மேல் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மேலும், தாங்கள் நினைத்ததை நிறைவேற்றுவார்கள். நீதி, நேர்மையில் நம்பிக்கை உடையவர்கள்.

எந்த வகையிலாவது முன்னேற துடிப்பார்கள். பயணத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள்.

சூழ்நிலையை அனுசரித்து பேசுபவர்கள். பிறரை புகழ்ந்து பேசக்கூடியவர்கள்.

இவர்களிடம் நகைச்சுவை உணர்வு மிகுதியாக இருக்கும். புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்புவார்கள்.

புதன் மேடு தாழ்ந்து இருந்தால் அல்லது இடம் பெயர்ந்து இருந்தால் குடும்பத்தின்மீது அக்கறை இல்லாதவர்களாக இருப்பார்கள்.

புதன் மேடு உப்பலாகவும், ரோஜா வண்ணத்திலும் இருந்தால் சிறந்த யோகசாலிகளாக இருப்பார்கள்.

சூரிய மேட்டுடன் சேர்ந்தது போல் புதன் மேடு அமைந்திருந்தால், வாழ்க்கையில் பெரும் புகழை சேர்ப்பார்கள். மேலும் நிறைய தான, தர்மங்களை செய்வார்கள்.

புதன் மேடு நன்றாக ஓங்கியிருந்தால் புத்திசாலிகளாக இருப்பார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pudhan medu yoghasalikal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->